Wednesday, December 3, 2008

புல்வெளி

வார்த்தைகளின்
இடைவெளிக்குள்
சொல்லத் தெரியாத
எத்தனையோ தகிப்புக்கள்
ஏதோ ஒரு நிலையில்
எழுந்து
அதற்கான அர்த்தங்கள்
புரியாமலே
பனிபடர்ந்திருக்கிறது உணர்வு
தனித்தலின் வெளியை
வெறித்தபடி
மெலிந்தபடியே காத்திருக்கிறது
பசியோடு கனவுப் பறவை
அது
தனது பச்சை வெளியை
நெருங்கி
மேய்ந்து விடுவதான
ஆசையை
ஒடித்துக் கொண்டிருக்கிறது
மரக்கிளை ஒன்றின்
மீதிருந்து
ஒவ்வொன்றாய் தருணங்கள்
தப்பிப்போக
கனவை வானுக்கு விரித்துவிட்டு
தன் திசையை
துரத்தி
தூரத்தே தொலைந்து விடுகிறது
பறவை
ஒரு புளியாகி.....

9 comments:

நட்புடன் ஜமால் said...

நாந்தான் 1st

படிச்சிட்டு வந்து --- வர்றேன்.

சந்தனமுல்லை said...

//ஒவ்வொன்றாய் தருணங்கள்
தப்பிப்போக
கனவை வானுக்கு விரித்துவிட்டு
தன் திசையை
துரத்தி
தூரத்தே தொலைந்து விடுகிறது
பறவை
ஒரு புளியாகி..... //

ம்ம்..மனசை ஒருவித சோகத்தில் ஆழ்த்தி விடுகிறதுங்க கவிதை!

நட்புடன் ஜமால் said...

\\வார்த்தைகளின்
இடைவெளிக்குள்\\

அருமை.

நட்புடன் ஜமால் said...

\\மெலிந்தபடியே காத்திருக்கிறது
பசியோடு கனவுப் பறவை
அது
தனது பச்சை வெளியை
நெருங்கி
மேய்ந்து விடுவதான
ஆசையை
ஒடித்துக் கொண்டிருக்கிறது
மரக்கிளை ஒன்றின்
மீதிருந்து
ஒவ்வொன்றாய் தருணங்கள்
தப்பிப்போக\\

ச்சே அருமைங்க.

நட்புடன் ஜமால் said...

\\கனவை வானுக்கு விரித்துவிட்டு
தன் திசையை
துரத்தி
தூரத்தே தொலைந்து விடுகிறது
பறவை
ஒரு புளியாகி.....\\

வலி.

ப. அருள்நேசன் said...

வாங்க அதிரை ஜமால்

அருமை,
ச்சே அருமைங்க,
வலி.

இத்தனை பாராட்டுக்கும் உங்கள் அன்பிற்கும் எனது நன்றிகள் ஜமால்.

வேறு, வலி அது உள்ளோடும் உணர்வு.

வாழ்த்துக்கள்ளோடும் சினேகிதத்தோடும் - ப. அருள்நேசன்

ப. அருள்நேசன் said...

வாங்க முல்லை

// ம்ம்..மனசை ஒருவித சோகத்தில் ஆழ்த்தி விடுகிறதுங்க கவிதை! //

சோகத்துக்குள்ளேயே வாழ்கிற ஒரு சமுகத்தின் பின்னணியில் சொல்லப்பட்ட இந்த கவிதை உங்கள் மனசையும் ஒரு நொடி கலங்கச் செய்துவிட்டிருக்கிறதா?

சந்திப்போம் நல்ல கவிதைகளோடும் இன்னும் பகிர்வுகளோடும்

நன்றிகள் வரவுக்கும் கருத்துக்கும்


வாழ்த்துக்கள்ளோடு- ப. அருள்நேசன்

Mathu said...

Very nice poem :) நல்ல இருக்கு...வாழ்த்துக்கள் :))

ப. அருள்நேசன் said...

நன்றி மது
உங்கள் புன்னகைக்கும், வாழ்த்துக்கும்.

வாழ்த்தப்படுகிறவனால் வாழ்த்துகிறவர் மகிழ்ந்தால்
அதைவிடவும் ஒரு இன்பமுண்டோ.