Monday, March 16, 2009

இறந்தபின்னும் வாழ்வோம்


நாங்கள் எப்போது
வேண்டுமானாலும் கொல்லப்படலாம்
எங்களையும் கடந்து
யுத்தம் போய்க்கொண்டேயிருக்கும்.
இதுவரை விழுந்த
பிணங்களைப் போலவே
நாங்களும்
அனாதைகளாய்க் கிடப்போம்
அப்போது
ஏதோ தேசத்திலிருக்கிற
எங்கள் உறவுகளுக்கு
செய்தி சொல்லி
அனுப்பப்படமாட்டாது

நாங்கள்
இருக்கிறோமோ இல்லையோ
என்பதற்கு தடயங்களேதும்
அப்போதிருக்காது
அந்த தேசத்திலிருந்து
எங்களுக்காக
மகனோ, மகளோ
தாயோ, தந்தையோ
காத்துக்கொண்டிருக்கலாம்
நாங்கள் எங்கேனும்
இருக்கலாம் என்ற
நம்பிக்கையோடு

எங்களையும் தொடர்ந்து
ஒருவேளை
எஞ்சியிருக்கிற உயிர்களெல்லாம்
பிணங்களானபிறகு
அமைதியடையலாம்
இந்த தேசம்
அபோது இந்த
சுதந்திர பூமியில்
பிணவாடையோடு
மலரும் பூக்கள்

5 comments:

நட்புடன் ஜமால் said...

\\ஏதோ தேசத்திலிருக்கிற
எங்கள் உறவுகளுக்கு
செய்தி சொல்லி
அனுப்பப்படமாட்டாது
\\

வரிகளில் வலி ...

Anonymous said...

கோபமும், ஆதங்கமும் ஒருசேர கலந்திருக்கிறது கவிதையில்..

வாழ்த்துக்கள்!

கார்த்திகைப் பாண்டியன் said...

உள்ளத்தின் கொதிப்பு வார்த்தையாய்... நல்ல கவிதை நண்பா..

ஆ.சுதா said...

//இதுவரை விழுந்த
பினங்களைப் போலவே
நாங்களும்
அனாதைகளாய்க் கிடப்போம்//

வலியோடிய கவிதை

Anonymous said...

இவை எங்கள் வாழ்வின் ரணங்கள்!