
தேன் மொழியே
கனியிதழே
குளிர் வனமே
கொஞ்சும் நிலவே - மேனி
கூசும் தென்றலே
மெல்லத் தத்தும் மேகமே
நெருப்பூங்குவளைச் சூரியனே
கசங்காத வானமே
கரைகின்ற மழையே
மலரே
கடலே
அலையே
பூமி நரம்பு அருவிகளே
புல்வெளியே
வில்வானில் விளைந்த
வெள்ளிகளே
என்னையும் உங்களோடு
சேர்த்துக்கொள்ளுங்கள்
இன்றுமுதல்
நான் கவிதை எழுதுபவன் அல்ல
கவிப்பாத்திரமாகிறேன்
காரணம்
என்னயும் ஒருத்தி
காதலிக்கிறாள்
2 comments:
மகிழ்ச்சி!
ஆனால், ஒரு வேண்டுகோள், நீங்கள் தொடர்ந்து முன்பு எழுதிய கவிதைகள் போன்றவைகளை கூட எழுத வேண்டும். இனி காதல் கவிதைகள் மட்டுமல்லாமல்!
And All The Best :)
நல்லது மது
உங்கள் வரவு குறித்தும்
ஆரோக்கியமான கருத்துக்கும் மகிழ்ச்சி
எனது சினேகத்துடனான
வாழ்த்துக்களும் நன்றிகளும்
Post a Comment