
மனச்சேற்றில்
ஞாபகத் தாமரைகள்
பூத்திருக்க
பார்வை தொலைந்து
மௌனியாய் இருக்கிறேன் நான்
அறையின் நிசப்தத்தை
நிரப்பிக்கொண்டிருக்கிறது
யன்னலேறிக் குதிக்கும்
அடுத்த தெருவின் சலசலப்பு
நாங்கள் பேசி முடிந்த
வார்த்தைகள் மேசை எங்கும்
கசங்கிக் கிடக்கின்றன.
மீண்டும் - வெறுமை
வேதாளம் முருங்கை மரமேறி
கிளை ஒடிக்கிறது – விரக்தி
நேற்றைய பொழுதின்
ஞாபகப் பருக்கை ஒன்று
அடக்கமுடியாத ஆனந்தமாய்
விரிந்து விரிந்து
என் தனிமையை வெல்ல
போராடிக்கொண்டிருக்கிறது.
மீண்டும் நாம்
சந்திக்கும் தொலைவு மீதான
ஆவலின் தாபம்
எல்லையற்று வளர்ந்து
தீர்த்துக் கொள்ள முடியா
தவிப்பை சிந்திக்கொண்டிருக்கிறது மனசு
மழை விட்டும் நிற்காத
தூறலாய்
2 comments:
Awesome :) Very nice poem! தொலைந்த பக்கங்கள்! நல்லா எழுதி இருக்கீங்க :)
Thanks Mathu
எல்லாம் தொலைவாகித்தான் போய்விட்டது
Post a Comment