பிக்னிக் கொட்டகைத் தூக்கம்
விழித்தால் சுர்றவர திருவிளாக்கோலம்
கண்ணுக்கெட்டிய தூரம்வரை
கூட்டம் கூட்டமாய் சன நெரிசல்
தொலைதூர
முட்க்ம்பி வேலிகளில்
ஐந்து நிமிட தரிசனத்திற்காய்
காத்துக்கிடக்கும் மக்கள்
சுற்றவர துப்ப்க்கிகளோடு
காவலர்கள்
உலக நாடுகளின்
பிரதிநிதிகளின் வாகனங்கள்
பரிசுப்பொருட்களோடு
அணிவகுப்பு ஆரம்பமாகிறது
புன்னகையோடு விடிகிறது நாள்
ஒரு அகதியின்
பிறந்தநாள்
சிறப்பாகத்தானிருக்கிறது
2 comments:
///உலக நாடுகளின்
பிரதிநிதிகளின் வாகனங்கள்
பரிசுப்பொருட்களோடு
அணிவகுப்பு ஆரம்பமாகிறது///
யதார்த்தமான பதிவு
வாங்க Doctor
எனது அன்பார்ந்த வணக்கங்கள், எமது நாட்டின் தமிழ் வைத்தியர்கள் அனைவருக்கும் எனது மரியாதையையும் அன்பையும் நன்றியயும் இந்த நேரத்தில் சொல்வது பொருத்தமானதாக இருக்கும் என்று நினைக்கிறேன், எமது மக்கள் (எனது வீட்டாரும்) அந்த அளப்பெரிய சேவையை பெற்றுக்கொண்டார்கள் என்ற வகையில்.
அண்ணன் சத்தியமூர்த்தி மற்றும் தம் உயிரையும் பொருட்படுத்தாமல் அங்கே பணியாற்றிய அனைத்து வைத்தியர்களையும் பெருமையோடு நினைத்துக்கொள்கிறேன்.
உங்கள் உடல் உள ஆரோக்கியத்திற்காக, பிரார்த்திக்கிறேன்
வாழ்த்துக்கள் Doctor ஜீவராஜ்
Post a Comment