Friday, June 19, 2009

பிரியத்தின் தூரம்


என் மனதில் ஏதோ ஒரு
சுமை ஒன்று
அது நீ
இல்லாததன் வெறுமையை
உள்வாங்கிப் பருக்கிறது
நினையுகள் கூட
தூரத்தே நெளியும்
நிலாவின் பிம்பமாய்
அலைந்துகொண்டிருக்கிறது
ஒருவாசல் திறந்து
ஒரு நேசம் வர
இன்னொரு வாசலால்
நீ போயிருப்பாய் என்று
சாவகாசமாய் இருந்துவிட்டேன்
இப்போதுதான் புரிகிறது
மனம் என்பது
வருவதற்கு மட்டுமே
ஏற்பாடுசெய்யப்பட்ட
ஒருவளிப்பாதை என்று

இப்போதுதான் புரிகிறது
எதை எல்லாம்
நான் அடைந்துவிட்டேன்
என்று நினைத்தேனோ
அதையெல்லாம் அப்போதே
இழந்துவிட்டேன் என்று
எதையெல்லாம்
என்னால் அடையமுடியாமல்போனதோ
அதைஎல்லாம் அடைவதற்காய்
இன்னும் மனம்
போராடிக்கொண்டிருக்கிறது

பெற்றுக்கொண்டவைகளை
விடவும்
பெறத்தவறியவைகளோடே
வாழ்கிறேன் நான்

4 comments:

Unknown said...

பெற்றுக்கொண்டவைகளை
விடவும்
பெறத்தவறியவைகளோடே
வாழ்கிறேன் நான் :)

Nalla iruku thozi!

Unknown said...

peraththavaryavaikal inru mathuthan nalai avai petrukondavaikalaka marum nanpa..
asthamanankal epavume nirantharam ilai..metkil marainthal kilakil uthikathan vendum....

நட்புடன் ஜமால் said...

எதை எல்லாம்
நான் அடைந்துவிட்டேன்
என்று நினைத்தேனோ
அதையெல்லாம் அப்போதே
இழந்துவிட்டேன் என்று]]


[[பெற்றுக்கொண்டவைகளை
விடவும்
பெறத்தவறியவைகளோடே
வாழ்கிறேன் நான்]]

அருமையா சொல்லியிருக்கீங்க தோழரே!

ப. அருள்நேசன் said...

எங்கே சகோதரா காணவே கிடைக்கவில்லை, மறந்திட்டீங்களோ என்று நினைத்தேன்.

நன்றி சகோ