Saturday, October 30, 2010

நான் நீயாகவும் - நீ நானாகவும்


நான் நீயாகவும்
நீ நானாகவும் இருக்கும்
தருணம் வந்தது


நீயாய் இருக்கின்ற என்னில்
எனதும் உனதும்
சாயல்கள் கலந்திருந்தன


நானாய் இருக்கின்ற
உன்னில் - நீ
நானோ நீயோ
அல்லாத சாயலொன்றில் இருந்தாய்


அந்தப் பிறிதொரு சாட்சி
நானாகவும் நீயாகவும்
பிம்பங்களைக் காட்டியது


அந்தச் சாட்சி
என்னையும் உன்னையும்
தொலைத்துவிட்டு
நான் நீயாகவும்
நீ நானாகவும் மாறும்
பிம்பங்களைச் செய்துகிண்டிருக்கிறது.

No comments: