
எங்கேயோ
விட்டுவிட்டு வந்த
கவிதை ஒன்றை
நான் எழுதிக்கொண்டிருக்கின்றேன்
நினைவை
கடந்து கடந்துபோய்
அதன் பொருளை
தேடிக் கண்டுபிடிக்கும்போது
வார்த்தைகள்
வேறெங்கோ பேசிக்கொண்டிருந்தன
இப்போதிருந்தே
ஆரம்பிக்கலாம் என்று
சொற்களை எடுத்தால்
அவை பொருள் மறந்துபோயிருந்தன
இப்படி
சொற்களுமில்லாமல் பொருளுமில்லாமல்
கவிதையொன்றை
எழுதிக்கொண்டிருக்கிறேன் நான்
2 comments:
கருவும் வார்த்தைகளும் ஆடும்
கண்ணாமூச்சி ஆட்டத்தை மிக அழகாகச்
சொல்லிப் போகும் அழகிய சொற்களும்
அற்புதமான பொருளும் கொண்ட கவிதை
அருமையிலும் அருமை
தொடர வாழ்த்துக்கள்
வாருங்கள் புதிய நண்பரே (Ramani)
மிக்க மகிழ்ச்சி உங்கள் வருகைக்கும் பின்னூட்டலுக்கும்
- ப. அருள்நேசன்
Post a Comment