
வானம் பார்த்தபடி
மல்லாந்து கிடக்கிறாள்
கடல் இராட்சசி
வார்த்தைகளற்ற மொழியின்
சங்கீதம்
கரையின் நீளத்திற்கும்
கேட்டுக்கொண்டேயிருக்கிறது
அலைகளின் கரங்களால்
தழுவிக்கொண்டேயிருக்கிறாள்
தன் மக்களை.
அவர்களுக்கு
கடலே தாய்
கடலே காதலி
கடலே சொந்தம் இன்னும்
கடலே தெய்வம்
அவர்களிடம் கண்ணீர் இருக்காது
கவலை இருக்காது
அந்த நாள்
அவளுக்கு என்ன துயரமோ…
என்ன கோபமோ…
என்ன நோய் தொற்றிக்கொண்டதோ…
இல்லை யார் மீது மோக வெறியோ…
அலைச்சேலையை
அவிழ்த்தெறிந்து அம்மணமானாள்
தலைவிரித்து கரைக்கேறி
தாண்டவமாடினாள்
தன் மக்களைத் தின்று
சக்கை துப்பினாள்
பூமியின் முதல் கர்ப்பம்
கலைந்து
சிதைந்து கிடந்தது
கரையெங்கும் பிணங்கள்…
முதன்முதலாய்
அலைகளையும் மீறிற்று
உலகின் ஒப்பாரிக் குரல்கள்
முதன்முதலாய்
பூமியே அழுதது
ஒருமுறை
சாதி
மதம்
இனம்
ஒன்றாகச் செத்துக்கிடந்தது
அவர்களின் சமாதிகள் மீது
மலர்ந்திருந்தது
மாசற்ற மனிதநேயம்
அத்தனை வலிகளையும்
வேதனைகளையும்
மெதுவாய் வருடிக்கொண்டு…
12 comments:
\\"கடலின் மக்கள்"\\
பொதுவாய் மீன்கள்
சில நேரம்
மீனவர்கள் ...
சுனாமியா ...
\\சாதி
மதம்
இனம்
ஒன்றாகச் செத்துக்கிடந்தது\\
ம்ம்ம் ... அருமை ...
\\அவர்களின் சமாதிகள் மீது
மலர்ந்திருந்தது
மாசற்ற மனிதநேயம்
அத்தனை வலிகளையும்
வேதனைகளையும்
மெதுவாய் வருடிக்கொண்டு…\\
வரிகள் தரும் வலி ...
கவிதையின் வலியோடு, உங்கள் ஃப்ரொஃபைலில் சொல்லப்பட்ட வார்த்தைகள் அதிகம் வலித்தது.
வாழ்த்துக்கள் நண்பரே.
//அவர்களின் சமாதிகள் மீது
மலர்ந்திருந்தது
மாசற்ற மனிதநேயம்
அத்தனை வலிகளையும்
வேதனைகளையும்
மெதுவாய் வருடிக்கொண்டு//
அழகிய வரிகள்....வலியும் கூட...
அன்புடன் அருணா
ஜமால் நன்றிகள்
இத்தனை அன்பிற்கும்.
//பொதுவாய் மீன்கள்
சில நேரம்
மீனவர்கள் ...//
//சுனாமியா ...//
//ம்ம்ம் ... அருமை ...//
//வரிகள் தரும் வலி ...//
இவ்வளவு நீங்களே சொல்லீட்டீங்க நான் வேற என்ன சொல்வது. வாழ்த்துக்கள் நண்பரே
// சாதி , மதம், இனம்
ஒன்றாகச் செத்துக்கிடந்தது.
அவர்களின் சமாதிகள் மீது
மலர்ந்திருந்தது
மாசற்ற மனிதநேயம் //
அற்புதமான வார்த்தைகள். இந்தியாவில் - நாகை மாவட்டத்தில் சுனாமியினால் இறந்தவர்களின் உடல்களை சேகரித்து அதை அடக்கம் செய்து கொண்டிருந்த சகோதரர்கள் இதையே வேறு மாதிரி சொன்னார்கள். " அவர்களாக (மனிதர்கள்) வந்தார்கள், அதுவாக (சடலம்) செல்கிறார்கள்" என்று. உண்மையில் பெயர் என்பது உயிருக்குதான். அந்த உயிர் போய்விட்டால் அனைவருக்கும் பொதுப்பெயர் "பிணம்".
ஆழிப்பேரலை(சுனாமி)உருவாக சில நியதிகள் உண்டு. அவை கடலுக்கடியில் 7.5 அளவிற்க்கு மேலான நிலநடுக்கம்(பூமி அதிர்ச்சி), குறிப்பு-
(மனிதர்கள் வாழும் நிலத்தில் எவ்வளவு பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டலும் அது ஆழிப்பேரலையை உருவாக்க இயலாது) அல்லது விண்ணிலிருந்து
பெரிய அளவில் உள்ள விண்பொருட்கள் கடலில் மோதுகை, ஆழ்கடலில் மிகப்பெரிய மண்சரிவுகள் அல்லது கடலுக்கடியில் உள்ள எரிமலை வெடிப்பு
போன்றவை ஆழிப்பேரலைகளை ஏற்படுத்தக் கூடிய மூலக் காரணிகளாகும்.
ஆழிப்பேரலை தாக்குதலுக்கு முன் கடலானது கடற்கரையிலிருந்து பின் வாங்கி சென்றுவிடும்.மேலும் ஆழிப்பேரலை குறித்து யாரும் பெரும் கிலி
கொள்ள தேவையில்லை. அதனால் கடற்கரையின் இருபுறமும் அதிகபட்சமாக 2 கி.மீ வரை தான் சேதத்தினை ஏற்ப்படுத்திட இயலும்.நாம்
ஆழிப்பேரலையை முன்கூட்டியே கணித்து அதைப்பற்றிய விவரத்தை சரியான நேரத்தில், சரியான நபர்களிடத்தே கொண்டு சேர்த்து விட்டால் ஏகப்பட்ட
உயிர்களை காப்பற்றிவிடலாம். மேலும் இலங்கை, இந்திய மீனவர்களிடம் இதை சேர்த்துவிட்டால் அவர்கள் தங்களுடைய மீன்பிடி படகுகளை
இயக்கி ஆழிப்பேரலை வருவதற்க்குமுன் கடலுக்குள் சென்றுவிடலாம்.கடலில் அவர்கள் 2கி.மீ தூரம் தாண்டிவிட்டால் பயமில்லை.இதனால்
பெருமளவில் உயிர் மற்றும் பொருள் சேதத்தினை தவிர்த்திடலாம். இந்த விஷயம் நிறைய பேர்களுக்கு தெரியாது. காரணம் இந்தேனேஷியாவில்
பாரிய பூகம்பம் ஏற்ப்பட்டு ஏறத்தாழ 2 மணி நேரம் கழித்தே ஆழிப்பேரலை இலங்கை மற்றும் இந்திய கடற்கரைகளை தாக்கியது. சரியான நேரத்தில்
தகவல்கள் பகிரப்பட்டு இருந்தால் சேத அளவு கணிசமாக குறைந்து இருக்கும். இனிவரும் காலங்களில் இதை நாமனைவரும் செயல் படுத்துவோம்.
இதற்காகதான் நாங்கள் "ஒருங்கிணைந்த ஆழிப்பேரலை கண்காணிப்பு சேவை" யை இது வரை நடத்தி வருகின்றோம். இதில் கொடுமை
என்னவென்றால் சுனாமி பற்றி 26 December 2004 -க்கு முன் இங்கு உள்ள நிறைய பேருக்கு தெரியாது. ஆதலால் யாரையும் எச்சரிக்கை
செய்தி அனுப்பி உயிர், உடமைகளை காக்க முடியாமல் போனது.போதுமான கால அவகாசம் இருந்தும் இதை செய்ய இயலாமல் போனது. இதில்
எங்களுக்கு அதிக குற்ற உணர்ச்சி உண்டு. இப்ப நிலைமை அப்படியில்லை. செல்லிட பேசி (Cell Phone) வழியாக குறுந்தகவல் (SMS)
அனுப்பி நமது இந்திய மற்றும் உலகின் கடற்கரை அருகே வசிக்கும் மக்களை காக்க நாங்கள் இந்த ஒருங்கிணைந்த ஆழிப்பேரலை கண்காணிப்பு சேவை - Integrated Tsunami Watcher Service யை இந்த சுனாமி தாக்குதலுக்கு பிறகு தொடர்ந்து இலவசமாக நடத்திக் கொண்டு
வருகின்றோம். உண்மையில் உயிர் என்பதுதான் விலை மதிக்க முடியாத ஒன்று. மற்றவைகளுக்கு விலை உண்டு. அதன் இணைய முகவரி
http://www.ina.in/itws/
குறிப்பு : இந்த பதிவில் http://gnuismail.blogspot.com/2008/10/blog-post.html இலங்கையை சேர்ந்தவர்களிடம் உதவி கேட்டிருந்தேன். இதுவரை கிட்டவில்லை. மேலும் இலங்கையை சுனாமி இன்னொரு முறை தாக்கினால் அங்கு வாழும் தமிழர்களுக்கு தான் அதிக பாதிப்பு ஏற்பட வாய்ப்பு அதிகம். காரணம் இலங்கையில் தமிழர்கள் அதிகமாக வசிப்பிடம் கடலை ஒட்டியே இருக்கின்றது. என்னிடம் இலங்கையை சார்ந்த செல்லிட பேசி எண்கள் தற்போது வெறும் 10 (பத்து) தான் உள்ளது. உங்களால் முடிந்தால் அவர்களின் செல்லிட பேசி (Cell Phone) எண்களை சேகரித்து எனக்கு gnuismail at gmail dot com என்ற முகவரிக்கு அனுப்பி வைத்தால் அதை list - ல் சேர்த்து விடுவேன். மிக்க நன்றி.
with care and love,
Muhammad Ismail .H, PHD,
வாங்க அமிர்தவர்ஷினி அம்மா
//கவிதையின் வலியோடு, உங்கள் ஃப்ரொஃபைலில் சொல்லப்பட்ட வார்த்தைகள் அதிகம் வலித்தது//
அது எங்களின் அடையாளத்தை சொல்ல எழுதப்பட்ட வரிகள்.
புன்னகைகளை பரஸ்பரம் பரிமாற, நாள் வரும் அதுவே எம் ஒரே கனவு.
மற்றப்படி இப்பவும் அம்மாவிடம் குட்டு வாங்கும் ஜாலியான சின்ன பையன் தான் நான்.
வாழ்த்துக்களுக்கு நன்றி. சந்திப்போம்.
வணக்கம்
அருணா மடம்,
//அழகிய வரிகள்....வலியும் கூட...//
அன்புடன் அருணா//
என் இனிய வாழ்த்துக்களும் நன்றிகளும்.
நண்பரே Muhammad Ismail .H, PHD,
நிச்சயம் உங்களுக்கு உதவ முயற்சிக்கிறேன்.
வரவுக்கு நன்றி
You have been given an Award. http://eanetharkueppadi.blogspot.com/2009/01/butterfly-award.html
Go to this page.
Post a Comment