Monday, January 5, 2009

என் ஒருவனுக்குள்

வசதியாய்
அகதியானேன் - வழியிலே
வழிப்பறி
தெருவெலாம் நீ
மலர்த்திய இராணுவம்,
என் சுதந்திர
தேசமெல்லாம் கைப்பற்றி
எனை வென்று கைதியாக்கி
சிறைக்கெய்தினாய்

நீ எனக்கு
திறந்து விட்ட - என் கனவுகளின்
பூ வனத்தில் - உன் காவலர்
துப்பாக்கி
பூக்களை அறுவடை செய்கின்றது.
என் இருதய இருதயம்
வேகம் பிடித்து
மூச்செறிகிற சுருதியில்
காற்றை சூடாக்கி
நீ சுகம் காண்கிறாய்.
அடுத்து
எனன செய்யப் போகிறாய்.
எல்லாமும் இழந்து விட்டவனிடம்
இன்னும் என்ன
தேடுகிறாய்.
எத்தனை முறை
அழிக்கப்பட்ட பிறகும்
மீண்டுவரும்
சூட்சுமத்தை தவிர
அத்தனையும் நாம் இழந்துவிட்டோமே

இப்போதெல்லாம்
ஒவ்வொரு
தெரு முனை கடக்கிறபோதும்
ஒலி பெருக்கி பொருத்தி
என் ஒருவனுக்குள்
ஒலிக்கிற
உயிரின் ஓசை - நீ
மரணம் அல்லது ஜனனம்
எது வென்று தீர்மானிக்கிற
உன் விழி வீச்சின்
சோதனைச் சாவடியில்....

7 comments:

Anonymous said...

மரணம் அல்லது ஜனனம்
எது வென்று தீர்மானிக்கிற
உன் விழி வீச்சின்
சோதனைச் சாவடியில்....

எங்கள் வாழ்வின் ரணங்கள்

நட்புடன் ஜமால் said...

\\எத்தனை முறை
அழிக்கப்பட்ட பிறகும்
மீண்டுவரும்
சூட்சுமத்தை தவிர
அத்தனையும் நாம் இழந்துவிட்டோமே\\

அருமை என் ஈழத்து தோழா ...

நட்புடன் ஜமால் said...

\\மரணம் அல்லது ஜனனம்
எது வென்று தீர்மானிக்கிற
உன் விழி வீச்சின்
சோதனைச் சாவடியில்....\\

என்னச்சொல்ல ... :(

ப. அருள்நேசன் said...

வாங்க கவின்

முதன்முதலா வந்திருக்கிறீங்க. என் இனிய வாழ்த்துக்களும் நன்றிகளும்.

//எங்கள் வாழ்வின் ரணங்கள்//

இதைவிட இன்னும் இருக்கு, எழுத சொற்களே வெட்கி முக்காடு போட்டுவிடுகிறன,

அன்புடன்
ப.அருள்நேசன்

ப. அருள்நேசன் said...

வருக நண்பரே ஜமால்

//அருமை என் ஈழத்து தோழா ...//

நன்றி,
"ஈழத்து தோழா" இப்படி அழைத்ததில் பெருமையும் சந்தோசமும் அடைகிறோம்.

//என்னச்சொல்ல ... :( //

வளமை போல வாழ்த்து மழையா,

நாமும், என்னச்சொல்ல,
வாழ்த்துக்கள்

தமிழ் தோழி said...

அண்ணா உங்க கவிதை அருமை. இது தான் கவிதை.

ப. அருள்நேசன் said...

வாருக தமிழ் தோழி

//அண்ணா உங்க கவிதை அருமை. இது தான் கவிதை.//

வரவுக்கும் கருத்துக்கும் நன்றி

வாழ்த்துக்களோடு
ப. அருள்நேசன்