
பூமி தன்
புறமுதுகை உதறிக்கொண்டு
புரண்டு படுத்தது
வானில் இருந்து
சூரியன் ஓங்காளித்த
தணற் திரள்கள்
தரை மேல் விழுந்து
பொருமின
அரணாய் நின்ற
சுவர்களில் இருந்து
உயிர் வளிந்துபோக
அசுர பூதமொன்று
அசைந்துகொண்டிருக்கிறது
எஞ்சிய
துளிகளை எல்லாம்
சிலுப்பி எறிந்தபடி.
சரிந்துபோன
மலையின்
பாறைகளைச் சேர்த்து
தூக்கி நிமிதிவிடலாம்
என்கிற முனைப்போடு - தங்கள்
முதுகுகளை சொருகியபடி
உந்தும்
அதன் இடைவெளிகளுக்குள்
ஓடி ஒளிந்துகொண்டன
அதன் அடிவாரத்தின் மீதிருந்த
ஜீவராசிகள்
இராட்சத பூதம்
திசைகளெல்லாம் சேர்த்துக்கொண்ட
பெருமேனி சிலிர்த்தபடி
எழுகிறது
ஒரே மூச்சில்
மலையை அமுக்கித்த்
தள்ளிவிடலாமென....
அதன் சத்தங்களுக்குள்
மௌனித்துப் போயிருக்கிறது
சாவின் குரல்
6 comments:
\\பூமி தன்
புறமுதுகை உதறிக்கொண்டு
புரண்டு படுத்தது
வானில் இருந்து
சூரியன் ஓங்காளித்த
தணற் திரள்கள்
தரை மேல் விழுந்து
பொருமின
அரணாய் நின்ற
சுவர்களில்\\
நல்ல வர்ணனையான துவக்கம்
உருக்கமான வரிகள்
உணர்வுபூர்வமான வரிகள்....அருமை!
//நல்ல வர்ணனையான துவக்கம்//
நன்றி நண்பர் ஜமால்
வருகைக்கும் கருத்துக்கும்
வாங்க கவின்
//உருக்கமான வரிகள்//
வரிகளில்தானே நாம் உருக்கத்தை காட்டமுடிகிறது
நன்றி உங்களுடைய கருத்துக்கு, சினேகத்துடன்
ப.அருள்நேசன்
வாங்க மது
//உணர்வுபூர்வமான வரிகள்....அருமை!//
நன்றிகளோடும், வாழ்த்துக்களோடும்
ப.அருள்நேசன்
Post a Comment