
பரலோகத்திலிருந்து
தேவதைகள் வெளியேற
பிசாசுகள் மேய்ந்து கொண்டிருக்கின்றன
புனித வாசலெங்கும்
தெருவழியாக
இழுத்துப்போய்
சூரியனைக் கொன்றுவிட்டு
திசைகளெங்கிலும்
வௌவால்களை தொங்கவிட்டு
விழாக்கோலம்
சூடுகிறது தேசம்
ஒருபோதும்
எழமுடியா பாதாளத்திலிருந்தும்
இன்னும் துரத்திக்கொண்டிருக்கின்றன
நரபலிவாசிகள்
முடிவிடம்
தெரிந்த ஒரு
தூரத்திற்கு
முடிவு தெரியாமல்
ஓடுகிறார்கள்
தம் தேசத்தினின்றும்...
ஆனைஇறாஞ்சிகள் தின்ற
உறவுகளினதும்
பிள்ளைகளினதும்
இரத்த வாடைகளினூடும்...
ஜபங்களாலும்
வேண்டுதல்களாலும்
நிறைந்துபோன
இரட்சணிய பூமி
இரணியம் புரள..
வானிலிருந்து
வரங்கள் வருமென்று
நம்பியிருந்தவர்கள்
தங்கள்மீது செய்யப்பட்ட
சாபங்களை
சுமந்தபடி நடக்கிறார்கள்
சிறைப்பிடிக்கப்பட்ட அழகி
முன்
இரத்தமும் சதையும் படைத்து
சாவோடும் அவலக்கிலிகளோடும்
வென்று
சாம்ராச்சியமேறுகிறான்
சாத்தான்
16 comments:
As usual, a nice poem :)
நல்லதொரு கவிதை...வலிகளோடு.. :(
ம்ம்ம்
வலிகள் நிறைந்த வரிகள் ...
வாழ்க்கையின் வலியை வார்த்தைகளாக்கி இருக்கிறீர்கள். வாழ்த்த முடியவில்லை. வருந்துகிறேன்.
அன்புள்ள அருள்நேசன்,
நீ நமது நகரத்தின் மற்றொரு குரல்.
நம்மிடமிருந்து எங்களின் கனவின் தீரக்குரல் ஒலிப்பது
மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.
உனது சொற்களுக்கும் மொழிக்கும் சற்று தனித்துவம்
அருப்பதை காணமுடிகிறது.
எனினும் சொற்களை நீ இன்னும் தேடவேண்டியிருக்கிறது.
உன்னை நமது ஒடுங்குகிற வாழ்வு
எழுதத்தூண்டும் .
நண்பன்
வாயிருந்தும் ஊமைகளாய் நாம்
விதியை பழி சொல்வதா
எம்மை நாமே நொந்து கொள்வதா?
அண்ணனின் வரிகள் இரத்தத்தால்
எழுதப்பட வேண்டியவை...........
வாங்க மது
As usual, a nice poem :)//
thanks for your wishes
சிநேகத்துடன்
ப.அருள்நேசன்
வாங்க எம்.ரிஷான் ஷெரீப்
//நல்லதொரு கவிதை...வலிகளோடு.. :( //
நன்றி, வலிக்கிறபோது வலியையும் எழுதுவோம், இன்னும் நிறைய சந்தோசங்களையும் கூட நேரம் வரும்போது பரிமாறிக்கொள்வோம்,
சிநேகத்துடன்
ப.அருள்நேசன்
வாங்க ஜமால்
//ம்ம்ம் வலிகள் நிறைந்த வரிகள் ... //
வருகைக்கு நன்றி ஜமால்,
சிநேகத்துடன்
ப.அருள்நேசன்
வாங்க சேரல்
//வாழ்க்கையின் வலியை வார்த்தைகளாக்கி இருக்கிறீர்கள். வாழ்த்த முடியவில்லை. வருந்துகிறேன்.//
ம்ம், இவையும் இன்னும் இருக்கிறது , வலிகள், அவர்களுக்கு வாழ்க்கை
சிநேகத்துடன்
ப.அருள்நேசன்
வாங்க நண்பர் தீபச்செல்வன்
//அன்புள்ள அருள்நேசன்,
நீ நமது நகரத்தின் மற்றொரு குரல்.
நம்மிடமிருந்து எங்களின் கனவின் தீரக்குரல் ஒலிப்பது
மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.
உனது சொற்களுக்கும் மொழிக்கும் சற்று தனித்துவம்
அருப்பதை காணமுடிகிறது.
எனினும் சொற்களை நீ இன்னும் தேடவேண்டியிருக்கிறது.
உன்னை நமது ஒடுங்குகிற வாழ்வு
எழுதத்தூண்டும் .
நண்பன்//
நன்றி, நிச்சயமாக எனது உணர்வுகளையேனும் நான் மதிக்கிறேன். இவை அதன் பிரதிபலிப்பின் வெளிச்சம், அதை இங்கே பீச்சுகிறேன்.
கருத்துக்கு நன்றி
சிநேகத்துடன்
ப.அருள்நேசன்
வாங்க தம்மி தேவா
//வாயிருந்தும் ஊமைகளாய் நாம்
விதியை பழி சொல்வதா
எம்மை நாமே நொந்து கொள்வதா?
அண்ணனின் வரிகள் இரத்தத்தால்
எழுதப்பட வேண்டியவை...........//
நன்றி, இனியும் ஒருதடவை இரத்தங்கள் சிந்தப்படக்கூடாதென்றே நான் எழுதுகிறேன். ஆனாலும் எழுதுவதால் ஏதும் ஆகாதென்றாலும், நமது திருப்திக்காகவாவது...
சிநேகத்துடன்
ப.அருள்நேசன்
//பரலோகத்திலிருந்து
தேவதைகள் வெளியேற
பிசாசுகள் மேய்ந்து கொண்டிருக்கின்றன
புனித வாசலெங்கும்//
புனிதவாசல் தேவதைகளிடம் இருந்து இந்தப் பிரபஞ்சம் தோன்றிபோதே பறிக்கப்பட்டு விட்டது நண்பா..
எல்லாம் பேய்கள்தான் நண்பா பேய்களிலும் நல்ல பேய்கள் உண்டென்பதை நாம் அறியவேண்டும்.. முதல் நாம் நல்லபேய்களின் பிடியில் இருந்தோம்.. இப்போது கெட்டபேய்கள்.. ஹா ஹா ஹா ..
நிச்சயமாக நீ ஒரு தேசத்தின் குரல்தான்.. பெருங்கவிஞர் தீபச்செல்வனே அதை ஒத்துக்கொண்ட பிறகு ஏதும் சந்தேகம் இருக்க வேண்டியதில்லை..)
ஆனால் சில உடனடியான தோசைகள் வெகுவிரைவில் பழுதாகிவிடும்.. கவிதைகள் வெறுமனே புதிய புதிய சொற்களிலும் உணர்வுமயப்பட்டதும் அல்ல.. வாழ்த்துக்கள்..
எனக்குப்பெயர் அகிலன் என்னை நினைவிருக்கிறதுதானே..
வலி கலந்த கவிதை
வா நண்பா அகிலன்
//புனிதவாசல் தேவதைகளிடம் இருந்து இந்தப் பிரபஞ்சம் தோன்றிபோதே பறிக்கப்பட்டு விட்டது நண்பா.. //
உண்மைதான்,
//பரலோகத்திலிருந்து
தேவதைகள் வெளியேற
பிசாசுகள் மேய்ந்து கொண்டிருக்கின்றன
புனித வாசலெங்கும்//
ஆனாலும், பறிபோவது எம் ஊர் என்பதோடு, வெழியேறிய மக்களில் என் தாயும்தங்கைகளும் தந்தையும்...
எல்லாம் பிசாசுகள், இந்தக்கவிதை அன்றைக்கு ஒரு பிசாசுக் கூட்டம் எங்கள் ஊரை விழுங்கி ஊடகங்களூடாய் ஏப்பம் விட்டபோது எழுதியது.
மற்றும்படி நான் யாருடைய குரலும் கிடையாது. இது என் சொந்தக்குரலப்பா
வாங்க கவின்
//வலி கலந்த கவிதை//
நன்றி,
அனைவருடைய கருத்துக்களையும் எதிர்பார்க்கிறேன்
சிநேகத்துடன்
ப.அருள்நேசன்
Post a Comment