Sunday, August 9, 2009

"WATER" திரைவிமர்சனம்


பத்து வயதுகூட நிரம்பாத குழந்தை சூர்யா , தூங்கிக்கொண்டிருக்கிறது.
அதனது தந்தை அவளை எழுப்புகிறார்.

My child,

"Do you remember getting married"

Baby said "No"

"Your husband is dead"

" You are a widow now"

Baby said " For how long father?"

WATER திரப்படம் இதிலிருந்து ஆரம்பிக்கிறது,

அந்தக் குழந்தையை தந்தை விதவைகள் வசிப்பிடமொன்றில் விட்டுவிட்டு வருகிறார், அவள் அம்மா அம்மா என்று கேட்டு அழுகிறாள். அந்த இல்லத்தின் பொறுப்பாளி மதுமதி வயசான கிழவி, அவள் அந்தக் குழந்தையிடம் சொல்கிறாள்

"Our Holly Books say a wife is part of her husband, while he is alive and when husband die, god help us, wives also half die so how can a half - dead women feel pain"

சூர்யா சொல்கிறள், " because she is half alive"

ஆத்திரம் கொண்ட முதியவள் சூர்யாவை கீளே தள்ளிவிட்டு திரும்பவும் இப்படி
பைத்தியக்காரத்தனமாய் நடந்துகொண்டால் ஆற்றில் தூக்கி எறிந்துவிடுவேன் என்று மிரட்டுகிறாள். சூர்யா " " I don't want to be a stupid widow fatty" என்று கத்திவிட்டு அவள் கலை கடித்துவிட்டு ஓடிவிடுகிறாள்.

அங்குள்ள இன்னொரு பெண், மதுமதிக்கு அடுத்தபடியாக அந்த இல்லத்தை பராமரிப்பவள் பெயர் தேவி, சூர்யாயுக்கு எல்லம் செய்து கொடுக்கிறாள் ஆனாலும் கண்டிப்புடனேயே நடந்துகொண்கிறாள், சூர்யாவுக்கு இன்னொரு துணை கிடைக்கிறது, அவளை சூர்யா கண்டவுடனேயே "Angel' என்று அளைக்கிறாள், அவளது பெயர் கல்யாணி, அழகிய திருமண வயது நிரம்பிய இழம் பெண். அவளும் சூர்யாவின் வயதிலிருக்கும்போதே விதவையாகியவள். கல்யானி சூர்யாவுக்கு தன்னுடைய நாய்க்குட்டியை விளையாடக்கொடுக்கிறாள். இருவரும் ஒருவருக்கொருவர் அன்போடிருக்கிறார்கள்.

ஒருமுறை பிரார்த்தனை செய்கிறபோது, " Where is the house for men widow" என்று சூர்யா கேட்கிறாள், அதற்கு " what a horrible thing to say, god protect our men from such fate, may your tongue burn, put out her tongue and throw it in the river" என்று கண்டபடி அவளை திட்டித்தீர்க்கிறார்கள்.

இப்படி இருக்கும்போது இவர்கள் இருவரும் நாராயணன் என்கிற வாலிபனை சந்திக்கிறார்கள், நாராயணன் கல்யாணிமீது காதல்வயப்படுகிறான், ஆரம்பத்தில் சங்கடத்தை உணர்ந்தாலும் கல்யணியும் காதலிக்க ஆரம்பிக்கிறாள். ஆனால் அதை யாராலும் ஜீரணிக்க முடியவில்லை, விதவைக்கு கல்யானமா? என்று எல்லோரும் சினக்கிறார்கள். ஆனாலும் கல்யாணியும் நாராயணனும் உறுதியாகவே இருக்கிறார்கள்.

இது அந்த முதிய கிழவிக்கு பிடிக்கவில்லை, காரணம் கல்யாணி அவர்களது சொத்தாயிருந்தாள், கல்யாணியை பணக்கார பிராமணர்களின் இச்சையை தீர்த்துக்கொள்ள அனுப்பி அதன்மூலம் பணம் பார்த்து பிளைத்துக்கொண்டிருந்தாள் அவள். அதற்காக பெண் தரகு வேலைபார்க்கும் அரவாணியோடு நட்பினையும் வைத்திருந்தாள். அவள் மூலம் கஞ்சா போன்ற போதை பொருட்களையும் வாங்கி அனுபவித்து வந்தாள் அந்தக்கிழவி. அவள் இதை அறிந்ததும் கல்யாணியின் கூந்தலை அறுத்து எறிந்து, அவளை ஒரு அறையில் போட்டு பூட்டிவிடுகிறாள்.

தேவி , தான் பணிவிடை செய்யும் வயசான பிராமணன் ஒருவனிடமிருந்து மறுமணம் பற்றிய சட்டம் அமுலில் இருப்பதை அறிந்துகொள்கிறாள், அவை ஏன் நமக்கு தெரிந்திருக்கவில்லை என்று அந்த முதியவனிடம் கேட்கிறாள், அதற்கு அவன், இதுபோன்ற சட்டங்களை நாம் புறக்கணிக்கிறோம் ஏன் என்றால் அவற்றல் நமக்கு ஒரு பயனுமில்லை என்று பதிலளிக்கிறான்.

தேவி அந்த இல்லத்தின் முதியகிழவியோடு சண்டையிட்டுக்கொண்டு, கல்யாணியை வெளியே அனுப்புகிறாள். கல்யாணியை ஏற்றுக்கொண்டு வள்ளத்தில் தனது வீட்டுக்கு அளைத்துச்செல்கிறான் நாராயணன், வளியில் அவனது தந்தையின் பெயரைக் கேட்கிறாள், அந்தப்பெயரை கேட்டதும் வள்ளத்தை திருப்பச்சொல்கிறாள், என்ன காரணம் என்று கேட்டதற்கு அதை உன் தந்தையிடமே கேட்டுக்கொள் என்று சொல்லிவிட்டு போகிறாள்.

நாராயணன் தந்தையிடம் கேட்கிறான், அதற்கு தந்தை " Bramins can sleep with whomever they want, and the women they sleep with are blessed" என்று பதிலளிக்கிறார்,

திரும்பிவந்த கல்யாணியை முதியவள் ஏழனித்துவிட்டு, கிலாபி ( பெண்தரகி) காத்திருக்கிறாள் அவ்ள் உன்னை ஒரு பிராமணன் வீட்டுக்கு அளைத்துச்செல்வாள், தயாராகு என்று கூறுகிறாள். வெறுப்படைந்த கல்யாணி ஆற்றில் மூழ்கி இறந்துவிடுகிறாள்.

நாராயணன் " Disguised as religion, it just about money" என்று சொல்லிவிட்டு புறப்படுகிறான்.

கல்யாணி இறந்துபோனதால், வருமானமில்லாமல் தவித்த கிழவி மதுமதி, சூர்யாவை வீட்டுக்கு அனுப்பிவிடுவதாக ஆசை காட்டி பிராமணன் வீட்டுக்கு அனுப்பிவைக்கிறாள்,எங்கே வந்திருக்கிறோம் என்று அறியாத குழந்தை I have come to play" என்று சொல்கிறது.

சூர்யாவை காணாது தேடிய தேவி, மதுமதியிடம் வந்து கேட்கிறாள் அதற்கு அவள் சூர்யாவை குலாபி அளைத்துச் சென்றிருப்பதாகச் சொல்கிறாள், கதறியபடியே சூர்யாவை தேடி ஓடுகிறாள் அவள். ஆற்றில் சூர்யா மயங்கிய நிலையில் வள்ளமொன்றில் கிடப்பதை பார்க்கிறாள். அவளை தூக்கிகொண்டு நடந்து வருகிறபோது மக்கள் காந்திஜீ ஐ பார்க்க ஓடுகிறார்கள். இவளும் சூர்யாவை தூக்கிக்கொண்டு ஓடுகிறாள். அங்கே காந்தி பேசுகிறார் "இவ்வளவு காலமும் நான் நம்பினேன் கடவுள் உண்மை என்று, ஆனால் இப்போது எனக்குத் தெரியும் உண்மைதான் கடவுள் என்று, தொழில்தான் உண்மை. இதுவே நான் அனுபவித்தவை அதுவே உங்களுக்கும் பொருந்தும் என்று நினைக்கிறேன்". இதைக்கேட்டதும் அவள் சூர்யாவை காந்தியுடன் அனுப்பிவிடுவது என்ற உடிவுக்கு வருகிறாள், ஆனால் அவரை சூள நெருங்கமுடியாதளவுக்கு மக்களும் அவரது தொண்டர்களும் இருக்கிறார்கள். காந்தி ரெயினில் ஏறுகிறார், ரெயின் புறப்படுகிறது அவள் சூர்யாவை தூக்கிக்கொண்டு அருகாலேயே ஓடுகிறாள், இந்தக் குழந்தையையும் உங்களுடன் அழைத்துச்செல்லுங்கள், யாராவது இந்தக் குழந்தையை காப்பாற்றுங்கள், இவள் ஒரு விதவை என்று கத்துகிறாள். தொண்டர்களோடு நாராயணனும் இருக்கிறான் அவன் தேவியையும் சூர்யாவையும் காண்கிறான், சூர்வாவை வாங்கிக்கிள்கிறான், ரெயின் போய்க்கொண்டேயிருக்றது பெருமூச்சோடு சூர்யா மறையும் வரை பார்த்துக்கொண்டிருக்கிறாள் தேவி.


அந்த மங்கலான வெளிச்சத்தோடு திரை மூடப்படுகிறது.

விமர்சனம் என்று தலைப்பை எழுதிவிட்டு, படத்தையே ஒப்புவித்துவிட்டேன், காரணம் அங்கே விமர்சிக்குமளவுக்கு இடைவெளிகள் காணப்படவில்லை - படம் மிகத் தெளிவாக 1938ம் ஆன்டளவில் பெண்கள் அதுவும் விதவைகளுக்கு இருந்த நிலைமையை சொல்கிறது. மதம் என்கிற இயந்திரத்தை வைத்து மதவாதிகள் எப்படிப்பிளைக்கிறார்கள் என்று ஒப்புவிக்கிறது WATER.

DEEPA MEHTA இந்தப் படத்தினுடைய இயக்குனர், சர்ச்சைகளுக்குமேல் சர்ச்சையாக வாங்கிக்கட்டியவர். ஐம்பூதங்களை தலைப்பாக வைத்து படம் எடுக்கிறார். உலகம்முளுதிலும் இருந்து கண்டனம் கிளம்பியதாமே அப்படி என்னதான் இருக்கிறது என்று பார்த்தால், உண்மை இருக்கிறது, பிறகு சர்ச்சை வராமல்?

"வைஸ்ணவ ஜனதோ...." என்ற மென்மையான இசையோடும், வெண்ணிற ஆடையோடும் படம் கலந்திருக்கிறது, அந்தக்காலத்தில் இருந்த மதவாதிகள் தமக்கேற்றாற்போல் தமது சௌகரியங்களுக்காக "புனித வாக்கு" சம்பிரதாயம் சடங்கு என்று எல்லாம் போட்ட சட்டங்கள் எத்தனை பேரின் வழ்வை பலியாக்கியது, யுத்தமில்லாத மரணம் இது.

மக்களெல்லாம் பூசிக்கிற மதங்களும் சமயச் சம்பிரதாயங்களும் அதன் மறுபக்கத்தில் எத்தனை அசிங்கத்தை பூசி நிற்கிறது என்பதை சொல்கிறது WATER. கடவுளின் பெயரை சொல்லிக்கொண்டு பிளைக்கும் கூட்டம், இந்தக்காலத்திலும் அழிந்துவிடவில்லை என்பதுதான் வருத்தம்.

இந்தக்காலத்து அரசியல் கட்சிகளும் மதங்களும் ஒன்று, பண்டைய காலத்தில் மக்களை அடிமைப்படுத்த அரசர்கள் உபயோகித்த தந்திர ஊடகம் தானே மதம், அதற்காகவே மதங்கள் தோன்றியும் இருக்கலாம். இன்றைய காலத்தில் அனேகமானோருக்கு கடவுள் நம்பிக்கை அற்றுப்போனதற்கு காரணமே மதங்கள் செய்கிற இதுபோன்ற அசிங்கத்தனங்கள்தான் காரணம்.

தீபா மேத்தாவின் சமூக அக்கறை, பெண்ணிய விடுதலை உணர்வு ஒவ்வொரு காட்சியிலும் வெளிப்படுகிறது. உலகத்தரம் வாந்த அருமையான திரைப்படம், கண்டிப்பாக இந்துமதத்தை பின்பற்றுபவர்கள் பார்க்கவேண்டிய திரைப்படம்.

இது ஒரு காலம் பிந்திய பதிவு, ஆனாலும் நல்ல படங்களை எப்போது வேண்டுமானாலும் பாராட்டலாம். ஏற்றுக்கொள்ளலாம்.

தீபா மேத்தாவுக்கு வாழ்த்துக்கள்.

7 comments:

நட்புடன் ஜமால் said...

இது ஒரு காலம் பிந்திய பதிவு, ஆனாலும் நல்ல படங்களை எப்போது வேண்டுமானாலும் பாராட்டலாம். ஏற்றுக்கொள்ளலாம்.]]


பாராட்டுகள்.

Anonymous said...

அருமையான கட்டுரை. சின்னச்சின்ன எழுத்துப்பிழைகளை மட்டும் சரி செய்து விடுங்க. //"வைஸ்ணவ ஜலதோ..// ஜனதோ

குளந்தை - குழந்தை

செந்தாரப்பட்டி பெத்துசாமி said...

அருமையான விமர்சனம், ரொம்பவே மெனக்கெட்டிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.

பி.கு: எழுத்துப் பிழைகளைத் தவிர்த்திருக்கலாம்.

ப. அருள்நேசன் said...

நல்லது நண்பர் ஜமால்,

நிச்சயமாக எழுத்துப் பிழைகளைத் தவிர்த்துக்கொள்கிறேன்,

நண்பர்களே, "சின்ன அம்மிணி"
"செந்தாரப்பட்டி பொத்துசாமி"
எனது மகிழ்ச்சியை தெரிவித்துக்கொள்கிறேன்.

சாந்தி நேசக்கரம் said...

நல்லவிடயங்களை எழுத காலம் ஒரு தடையில்லை. காலம்பிந்தினாலுமஇ இருமையானதொரு விமர்சனம்.

பாராட்டுக்கள்.

சாந்தி

ப. அருள்நேசன் said...

//இருமையானதொரு விமர்சனம்//

இப்படி திட்டாதீங்க முல்லைமண் ஹா ஹா

நன்றி 'சாந்தி'

கார்த்திகைப் பாண்டியன் said...

அருமையான படம்.. குறிப்பாக பின்னணி இசை நன்றாக இருக்கும்.. இன்னும் கொஞ்சம் டெக்னிகல் சமாச்சாரங்களையும் சேர்த்து எழுதுங்கள் நண்பா