
நான் மட்டும்
மிச்சமிருக்கிறேன்
என் வாழ்வு பிடுங்கப்பட்டு
தெருக்குப்பையில்
கிடக்கிறது.
நெஞ்சில் இருந்து
நாருரித்தும்
உணர்வுகள் பீறிடாதபடிக்கு
உள்ளத் தீயில்
உணர்வுகள் காய்ந்துவிட்டன.
கடைசியாக
ஒரே ஒரு தடவை
எனக்காக அழக் கூட
கண்ணீரில்லை என்னிடம்…
கனவு வாழ்க்கை எல்லாமும்
கண்ணீரிலே மூழ்கிவிட்டன.
மூச்சுத்திணறி
செத்துக்கிடக்கிறது
எத்தனையோ பேரின் எதிர்காலம்…
ஒருவேளை
இன்னும் சில நாட்களில்
அல்லது
அதற்கு பிறகோ
என்னிடமுள்ள
சூழல் மீதான நியாயங்களையும்
அதன் மீதான
நம்பிக்கையையும் கூட
நான் இழந்துபோகலாம்
இப்போதான
என் வருதம்
உணர்வுகளை காக்க இயலாது
ஓர் உடம்பிருந்து
என்னபயன்
5 comments:
\\ஒருவேளை
இன்னும் சில நாட்களில்
அல்லது
அதற்கு பிறகோ
என்னிடமுள்ள
சூழல் மீதான நியாயங்களையும்
அதன் மீதான
நம்பிக்கையையும் கூட
நான் இழந்துபோகலாம்\\
ஒன்றும் சொல்வதற்கில்லை தோழா
கடைசியாக
ஒரே ஒரு தடவை
எனக்காக அழக் கூட
கண்ணீரில்லை என்னிடம்…
கனவு வாழ்க்கை எல்லாமும்
கண்ணீரிலே மூழ்கிவிட்டன.
மூச்சுத்திணறி
செத்துக்கிடக்கிறது
எத்தனையோ பேரின் எதிர்காலம்…
/
எமக்கு கிடைத்திட்ட சாபம்
கவிதை நல்லா இருக்கு அடிக்கடி எழுதுங்கள்
வாங்க நண்பரே ஜமால்,
//ஒன்றும் சொல்வதற்கில்லை தோழா//
அப்படித்தான் நானும் உணர்கிறேன், ஆனால் பேசவேண்டி வார்த்தைகள் வற்புறுத்தியபடியிருக்கின்றன, கருத்துச்சுதந்திரம் கொலைசெய்யப்பட்ட பிறகும்.
வாங்க கவின்
//எமக்கு கிடைத்திட்ட சாபம்//
இரண்டு வகை சாபமிருக்கிறது கவின், ஒன்று சாத்தானின் சாபம் மற்றயது கடவுளின் சாபம். நாம் அனுபவிப்பது கடவுளின் சாபம், நம் மக்கள் அனுபவிப்பது சாத்தானின் சாபம்.
//கவிதை நல்லா இருக்கு அடிக்கடி எழுதுங்கள்//
முயற்சிக்கிறேன்,
Post a Comment