
பூமி தன்மீது
பூசிக்கொண்ட வர்ணங்களால்
மேனி பூசிக்கொண்டு
அடையாளம் காட்டுகிறேன் - நான்
எனது நிறங்களிலிருந்து
வேறுபட்டுக் கலைகிற
முகங்களில்
என் நிறங்களை
பூச முனைந்து திரும்புகையில்
நிறங்களற்ற பிறிதொரு
வெளியை என்னுள் உணர்கிறேன்
கூடப் பயணிக்கிற
தனிமையின் நான்கு சுவர்களில்
தெறித்து நெழிகிற
என் உணர்வலைகளினின்று
மொழி தொடாதவோர்
அர்த்தம் விளங்க
என்னில்
வளர்ந்து நிற்கும்
கனவு விருட்சங்கள்
மறைந்துபோக
நிலத்தில் விழுந்துகிடக்கும்
எனது நிழலின்
நியாயம் புரிகிறது
என் வாழயியலாத் தருணங்களில்
சுமந்த எண்ணங்களை
அறுத்தெறிந்து வெறுமையாகையில்
சூரியனைவிடவுமோர் ஒளி
என்னுள் பரவுகிறது
அப்போதான எனது
புன்னகை
பகட்டுப் பகல்களையும்
எரித்துக்கொண்டே வளர்கிறது
6 comments:
கவிதையில் ஏதோ ஒரு
உணர்ச்சி பிளிறல் தெறிகிரது
அதை என்னக்கு சொல்லத்தெறிய வில்லை.
கவிதையில் மிகவும் ஆழமான உணர்வுகள் தெறித்துத் தகிக்கின்றன.
வாழ்த்துக்கள்
அன்புடன்
சக்தி
கவித்துவமான வரிகள்!
வாங்க ஆ.முத்துராமலிங்கம்
பிளிரல் எதுவுமல்ல மனிதன் முகத்தோலுரித்தால்! அதான் இது....
நன்றிப்பா,
பனைமரக்கிளையில் காதல் ஊஞ்சல் கட்டி ..... அசத்துங்க
வாங்க "சக்தி சக்திதாசன்"
//வாழ்த்துக்கள்
அன்புடன்
சக்தி//
மிகவும் நன்றி,
// கவித்துவமான வரிகள்! //
கவின் திருவள்ளுவரை மிஞ்சீட்டீங்க, அவர் இரண்டடி எழுதினார்,நீங்க ஓரடி அதுவு ஒரேயடி ஹா ஹா
எப்பிடி இருக்கு கவிதைகள் , நம்ம யூத்துக்கு எப்படி எழுதினா போய்ச்சேரும், இதெல்லாமும் கூட சொல்லலாம் [ அதுக்காக கோவிச்சுக்காதேங்க ]
நன்றி கவின்
Post a Comment