
அசுத்தமாகிவிட்டது
எனது பேனா
என் இனிய மனிதர்களை
பிரிந்து பிரிந்து
பிழந்துகொண்டு பாய்ந்த
அத்தனை பரிவும்
தீர்ந்தபின்
பொய்யெழுதி வடிகிற
வார்த்தைகளின் வாடைகளோடு
சமரசம் செய்துகொண்டிருக்கிறது
என் பேனா
புத்தகத் தாழ்களுக்குள்
ஒழித்துவைத்த
பிரியங்களையும் துயரங்களையும்
எரியூட்டி
சாக்கடை கால்வாயில்
கரைத்துவிட்டு
பெருமூச்செறிகிற வேளையிலும்
இருதயத்தில்
அறைந்துகொண்டிருக்கிற அந்த
உணர்வினெச்சத்தை இன்னும்
நிறுத்தமுடியவில்லை
வீதியில் இறங்கும்போது
ஏற்றிய
நறுமணம் வீசும் ஒரு புன்னகை
வீடு திரும்பி
கழற்றி மாட்டுகையில்
பலமாகச் சிரிக்கிறது
புறங்கையில் நனைகிற
ஒரு துளி
கண்ணீரைப் பார்த்து
7 comments:
\பிரியங்களையும் துயரங்களையும்
எரியூட்டி
சாக்கடை கால்வாயில்
கரைத்துவிட்டு
பெருமூச்செறிகிற வேளையிலும்
இருதயத்தில்
அறைந்துகொண்டிருக்கிற அந்த
உணர்வினெச்சத்தை இன்னும்
நிறுத்தமுடியவில்லை\\
மிக அழகாக
உணர்வுகளை சொல்லியிருக்கின்றீர்கள்
வீதியில் இறங்கும்போது
ஏற்றிய
நறுமணம் வீசும் ஒரு புன்னகை
வீடு திரும்பி
கழற்றி மாட்டுகையில்
பலமாகச் சிரிக்கிறது
///
வார்தைகளை நன்றாகவே பயன்படுத்துகிறீர்கள்
உங்களையும் ஒரு தொடர்பதிவிற்கு அழைத்திருகிறேன்,எனது பதிவினை பார்கவும்.முடிந்தால் எழுதுமாறும்,முடியாவிட்டாலும் எழுதுமாறும் உரிமையுடன் அழைக்கிறேன்
நண்பன் கவின்
//வீதியில் இறங்கும்போது
ஏற்றிய
நறுமணம் வீசும் ஒரு புன்னகை
வீடு திரும்பி
கழற்றி மாட்டுகையில்
பலமாகச் சிரிக்கிறது
புறங்கையில் நனைகிற
ஒரு துளி
கண்ணீரைப் பார்த்து//
நாம் எல்லாருமே இன்று ஒரு முகமூடியுடன் தானே நண்பா வாழ்ந்து வருகிறோம்.. நல்ல பதிவு..
நண்பரே ஜமால்,
//மிக அழகாக
உணர்வுகளை சொல்லியிருக்கின்றீர்கள்//
இதில், வளமைபோல நமது வலிகளை விட்டு, சமூகத்தையும் உலகத்தையும் பற்றி சொல்கிறது கவிதை, எங்கு மனிதன் நின்மதியாகவிருக்கிறான் பாருங்கள்
கவின்,
//வார்தைகளை நன்றாகவே பயன்படுத்துகிறீர்கள்//
என்னசெய்வது கவின், மக்குகளுக்கு அது புரியுதில்லையே ( பெண்களை சொன்னோம்)
உங்களையும் ஒரு தொடர்பதிவிற்கு அழைத்திருகிறேன்,எனது பதிவினை பார்கவும்.முடிந்தால் எழுதுமாறும்,முடியாவிட்டாலும் எழுதுமாறும் உரிமையுடன் அழைக்கிறேன்
அப்படி என்கிறீங்க பாத்திரலாம்
வாங்க "கார்த்திகைப் பாண்டியன்",
//நாம் எல்லாருமே இன்று ஒரு முகமூடியுடன் தானே நண்பா வாழ்ந்து வருகிறோம்.. நல்ல பதிவு..//
பின்னூட்டத்தின் தன்மையிலிருந்து புரிகிறது, ஜதார்த்த நோக்குடையவர் நீங்கள் என்று, இன்று கவிதைகளை புரிந்துகொள்பவர்கள் எததனைபேர் என்பது கேழ்விக்குறிதான்
நன்றி நண்பரே,
Post a Comment